
வான வெளியில் எல்லாம்வல்ல இறைவனின் கட்டளையால் இயங்கி வரும் ராசி மண்டலத்தின் இரண்டாவது ராசி ரிஷபம் எனப்படும். ரிஷபம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் ‘எருது’ என்று பொருள். இந்த ராசியில் காணப்படும் நட்சத்திரக் கூட்டத்தின் அமைப்பு எருதைப்போல தோற்றமளிப்பதால் இந்த ராசிக்கு ரிஷபம் என்ற பெயரளித்தனர். நமது கற்றறிந்த முன்னோர்கள். இந்த ராசி 30டிகிரி முதல் 60 டிகிரி வரை வியாபித்திருக்கிறது.
கால புருஷனின் முகத்தைக் குறிக்கும் இது முதல் ஸ்திர ராசியாகும். இந்த ராசியில் கிருத்திகையின் 2,3,4ஆம் பாதங்களும், ரோகிணி நட்சத்திரமும், மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களும் அடங்கியுள்ளன. இந்த நட்சத்திரங்களில் ஏதாவதொன்றில் பிறந்தால் ரிஷப ராசி என்றும், பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட இந்த ராசி அமைந்தால் ரிஷப லக்கினம் என்றும் கூறுவார்கள். சிலருக்கு லக்கினமும், ராசியும் ரிஷபமாகவே அமைவதுண்டு.
பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் தத்துவத்தைச் சேர்ந்த இந்த ராசி எருதுகள் வசிக்குமிடம், மாட்டுத் தொழுவம், மேய்ச்சல் பூமிகள், பயிரிடுமிடங்கள், காடுகள் ஆகியவற்றைக் குறிப்பதாகும். மேஷ ராசியைப்போன்று குட்டையானதும், பிருஷ்டோதய ராசியுமாகும். இந்த ராசி நீர் தத்துவத்தைச்சேர்ந்ததாகையால் சீதள சுபாவம் கொண்டதாகும். வெண்மை நிறம் கொண்ட இந்த ராசி ஒரு சுயராசியாகும். பிருஷ்டோதய ராசியாகையால் மேஷ ராசியைப் போன்றே இரவில் வலுப்பெற்றதாகும். இது ஒரு சவ்விய-அபசவ்விய ராசியாகும். இந்த ராசி பெண் ராசியாகும். சாத்வீக குணமும், பித்த சுபாவமும் கொண்டது. இதன் நட்சத்திர நாயகர்களான சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் தங்கள் தெசாகாலங்களின் முடிவில்தான் பலன் ஏற்படுத்துவர். இந்த லக்னத்துக்கு முடிவில்தான் பலன் ஏற்படுத்துவர். இந்த லக்னத்துக்கு கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகள் நட்பு ராசிகளாகவும், மற்றவை பகை ராசிகளாகவும் அமைகின்றன.
சத்துவ குணம் கொண்ட இந்த லக்கினத்தின் அதிபதி ரஜோகுணம் கொண்டவரும், சிங்காரம் முதலிய இனிய சுவைகளுக்கும் அரிய கலைகளுக்கும் காரகம் வகிப்பவரும், இயற்கையிலேயே சுபரும் ஆன பார்கவன் எனப் போற்றப்படும் சுக்கிரனாவார். சுக்கிர பகவானுக இவ்வீடு ஆட்சிவீடாக அமைகிறது. நவக்கிரக நாயர்களின் மற்றோர் இளவரசனான சந்திரனுக்கு இந்த ராசியில் முதல் மூன்று பாகைகள் உச்சமாகவும், மீதி இருபத்தேழு பாகைகள் மூலத்திரிகோணமாகவும் அமைகின்றன. இந்த ராசியில் சூரியனும் குருபகவானும் பகை பெறுகின்றனர். புதன், சனி இருவரும் நட்பு பெறுகின்றனர். செவ்வாய் நட்பு பெறும் இந்த ராசி-கேதுகளுக்கு நீசமாக அமைகிறது.
தென் திசையைக் குறிக்கும் இந்த லக்னத்தில்தான் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்திருக்கிறார். இனி இந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் பலா பலன் பலன்களை ஆராய்ந்து பார்க்கலாம்.
நீங்கள் இனிமையான சுபாவம் உடையவர்கள். உங்களிடம் பழகுதலேகூட ஒரு இனிமையாகத் தோன்றும். எல்லாரையும் வசியப்படுத்தும் வசீகரத் தோற்றமுடையவர்கள். குட்டையானவர்கள் அல்ல என்றாலும் உயரமானவர்களுமல்ல. நடுத்தர உயரம் பெற்று கம்பீரமாகத் தோற்றமளிப்பீர்கள். நீண்ட கழுத்தும், திரண்ட அங்க அமைப்புகளும், அகன்ற மார்பும், விரிந்த தோள்களும் கொண்ட நீங்கள் நிமிர்ந்து நடப்பவர்கள், உங்களது கண்களுக்கு ஒரு தனித்த அழகும், கவர்ச்சியும், அறிவொளியும் அமைந்திருக்கும். குட்டையான விரிவான மூக்கும், பற்கள் சிறுத்தும் வரிசையாகவும் தோற்றமளிக்கும், நெற்றி அகன்றும் கீழ்பாகம் உயர்ந்தும், மேல் பாகம்சரிந்தும் காணப்படுவீர். உங்களது கேசம் அடர்த்தியாக இருக்கும். பழக்கமில்லாத புதிய நண்பர்களுடனும், விருந்தாளிகளுடனும் புதிதாக பழக்கமேற்படுத்திக் கொள்வதில் மிகவும் சங்கடப்படுவீர்கள் வார்த்தைகளை அளந்து பேசும் உங்களின் பேச்சில் உறுதி காணப்பட்டாலும் பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிக்காதவாறு மிகவும் எச்சரிக்கையுடன் பேசுவர்.
அறிவாற்றலும், நிகரற்ற ஞாபகசக்தியும் படைத்த நீங்கள் உண்மைக்கு பெருமதிப்பு கொடுப்பீர்கள். தங்களால் இயன்ற அளவு உண்மைய பழக்கத்தில் கையாளும் பண்பு பெற்றவர்கள். தற்பெருமைகக்கும் புகழ்ச்சிக்கும் ஆசைப்படாத நீங்கள், எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபதாபம் கொள்வதும் இல்லை. பிறரை சமனாகக்கருதி அவர்களையும் தன்னுடன் இணைத்துச் செல்லும் சுபாவம் படைத்த நீங்கள் மற்றவர்மீது அதிகாரம் செலுத்தவோ அல்லது மற்றவரைத் தன் வசமாக்கிக் கொள்ளவோ ஆசைப்படமாட்டீர்கள். நீங்கள் ஈடுபடும் காரியங்களிலெல்லாம் தியாகம், சுயநலமின்மை, பெருந்தன்மை மேலோங்கி நிற்கும்.
நேர்மையே குறிக்கோளாகக்கொண்ட உங்களுடன் நேர்மையற்றவர்கள் பழகுவது கடினமாகும். பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது தங்கள் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாது விட்டுக்கொடுத்து செயலாற்றி எளியவர்களை முன்னேற்றமடையச் செய்வர். மிகவும் பொறுமைசாலிகளான நீங்கள் சகிப்புத் தன்மை பெற்றவர். பிடிவாத குணம் படைத்த நீங்கள் பிறருக்கு அடிபணிவதென்பது நடக்காத காரியம். சிந்தனா சக்தியிலும் செயலாற்றுவதிலும் நிதானமாக ஈடுபட்டாலும், தன்னம்பிக்கையும் அசட்டுத் தைரியமும் மேலோங்கி நிற்பதால் உங்களுடைய கருத்தை மாற்றுவது மிகவும் கடினம் நீங்கள்எளியவாழ்க்கையில் விருப்பம் கொண்டவர்கள். எருது போல் நடையும், கஷ்டத்தைத் தாங்கும் சகிப்புத் தன்மையும், கொண்டவர். பிறருக்காக உழைத்து தியாகம் செய்யும் நற்குணம் பெற்றவரானாலும், எவருக்கும் எளிதில் வீட்டுக்கொடுக்காத பிடிவாத குணம் கொண்டவர்கள். உங்கள் சாதுவாக தோற்றம் அளித்தாலும், சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற வாக்கிற்கிணங்க இந்த லக்னக்காரர்கள் கோபம் கொண்டால் உங்களை யாரும் நெருங்கவோ அல்லது எதிர்க்கவோ முடியாது. உங்களுக்கு சகோதரர்களாலும், பெற்றோராலும் உறவினர்களாலும் தொல்லைகள் தான் அதிகம் ஏற்படும். ஆனால் நண்பர்களால் உதவியுண்டு. விரோதிகளால் தொல்லைகள் ஏற்படினும் அவற்றைக் கண்டு பயப்பட மாட்டீர்கள். நீங்கள் சாதாரணப்பேர்வழிகளாக தோற்றமளித்தாலும் உங்களுடன் யார் வம்புக்கு வந்தாலும் அவர்களை கடைசிவரை விரட்டியாடித்து அவமானத்திற்குள்ளாக்கி விடுவீர்கள்.
நீங்கள் சாமர்த்தியமாகவும், சாதுரியமாகவும் வேடிக்கையாகவும், கவர்ச்சியாகவும், நயமாகவும், பிறரைத் தன் வசமாக்கக்கூடிய அளவுக்கு பேசும் ஆற்றலுடையவர்களாகவுமிருப்பீர்கள். உங்களுடைய பேச்சில் ஆழ்ந்த கருத்துகள் பிரதிபலிக்கும். பேச்சில் இவர்கள் தம்மைப் பிறர் வெல்ல இடம் கொடுக்க மாட்டீர்கள். சில சமயங்களில் குதர்க்கமாகவும், குயுக்தியாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானம் செய்வதில் சாமர்த்தியசாலிகள். தர்க்கவாதிகளாலும் சட்டம் கற்றுத் தெரிந்தவர்களாலும் உங்களுடைய பேச்சுத் திறமையை மெச்சும் அளவுக்கு உங்களுடைய பேச்சில் அறிவாற்றலும், திறமையும் புலமையும் பிரதிபலிக்கும். தமக்காக வாதாடுவதைவிட பிறருக்காக வாதாடுவார்கள். பேச்சளவில் தங்களுக்காகவென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ளாதவர்களானாலும், எந்த சமயத்தில் எந்தக்கட்சிக்காக வாதாடுகிறாரோ, அந்த கட்சிக்காக வாதாடி வெற்றி பெறுவார்கள். அந்த அளவுக்கு நீங்கள் போற்றத்கரிய சாதுரியம் பெற்றவர்கள்.
நீங்கள் வயதில் சிறுவர்களாயினும், அந்தஸ்தில் சிறியவர்களாயினும், வயது முதிர்ந்தவர்களும், பெரியோர்களும், அறிவாளிகளும்கூட வயது, அந்தஸ்து முதலியவற்றைப் பாராமல் உங்களுடைய அறிவுரைகளை ஏற்று அதன்படி நடந்து அரிய பலன்களைப் பெற்று மகிழ்ச்சியடைவார்கள்.
நீங்கள் பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயினும், வளர வளர தனியாக வேறு இடத்தில் வளர வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். சிறுவயதிலிருந்தம் தமது பெற்றோரிடமிருந்தம் சகோதர-சகோதரிகளிடமிருந்தே பிரிந்து வாழ வேண்டிவரும். ஆயினும் சிறுவயதிலிருந்தே குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். உடன் பிறந்தவர்க்கு திருமணமானபின்தான் தான், செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாதலால் பெரும்பாலோர்க்கு நாள் கடந்துதான் திருமணமாகும். ஆயினும் புத்திரர்கள் குறைந்து அளவான குடும்பம் அமையப் பெற்றவர்களாக இருப்பீர்கள். ஒரு சிலர்க்கு சீக்கிரமாகவே திருமணம் முடிந்திருந்தாலும் புத்திரப்பேறு நாள் கடந்துதான் ஏற்படும். ஒரு சிலர்க்கு சாந்தி முறைகளைக் கையாண்ட பிறகுதான் புத்திரப்பேறு ஏற்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். உங்களுக்கு வாய்க்கும் மனைவி அடக்கமுள்ளவளாக இருப்பதால் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே அமைந்திருக்கும். ஆடம்பரமாக வாழ வேண்டுமென்றே ஆசை கொண்டிருந்தாலும், அதற்காக பிரயாசைப்படுபவர்களல்லவாதலால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏதும் ஏற்படக் காரணமாவதில்லை நீங்கள் கண்ட நேரத்தில் கண்டபடி சாப்பிடுபவர்கள் அல்லர். பசித்திருக்கும் போதும். அவசியமானபோதும் தமக்குப் பிடித்ததை விருப்பமுடன் சாப்பிடுவார்கள். தண்ணீர், காப்பி, டீ குளிர்ந்த பானங்கள் நீங்கள் அதிகமாக விரும்பி அருந்துவார்கள்.
ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் சுத்தமான உடைகளை உடுத்தவே ஆசைப்படுவீர். தூய வெண்மையான உடைகளே உங்களுக்கு மிகப் பிடித்தமானவை. சிறிது தூசு படிந்திருந்தாலும், உடனே வேறு ஆடையை அணிந்திடுவீர்கள். பழக்கமான உடைதவிர, புதுபாஷன்களில் உங்களில் கவனம் செல்லாது. மடிப்புக்கலையாமலிருக்க அடிக்கடி உடையை சரிப்படுத்திக் கொள்ளும் நீங்கள் கவர்ச்சிகரமாகவும், உடுப்பதற்கு மிக சௌகரியமானதாகவும் உள்ள உடைகளையே தேர்ந்தெடுப்பீர்கள்.
உங்களுக்கு உடன் பிறந்தர்களால் எந்தவித சௌரியமும் ஏற்படாது. சகோதர்களானால் ஒற்றுமை நிலவுவது மிகக்கடினம். உங்களுடைய உதவி அவர்களுக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். சிலருக்கு தங்கள் சகோதரர்களுடைய குடும்பப் பொறுப்பையும் சேர்த்தே நிர்வகிக்க வேண்டிய அவசியமும் ஏற்படும். சகோதரிகளானால் உங்களுடன் ஒற்றுமையாக இருந்து வருவர். எனினும், உடன் பிறந்தவர்களால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் தான் அதிகமே தவிர ஆதாயம் ஏதும் ஏற்படாது.
எதையும் தாங்கும் இதயம் கொண்ட நீங்கள் எந்தத் துறையிலும் துணிந்து செயலாற்றி வெற்றி பெறுவார்கள். பொது நல சேவைகளில் அதிக நாட்டம் கொண்ட நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், தொழில் துறையில் மேலோரால் வஞ்சிகப்பட்டவர்கள். முதலாளிகளிடத்தில் சலுகைபெற விரும்புபவர்கள் உங்களுக்காக உதவி செய்து அவர்களுடைய குறைகளை தீர்க்கமுன் வருவார்கள். உங்களுடைய விடா முயற்சியும் பரோபகார சிந்தனையும் புகழையும், கீர்த்தியையும் பெருகச் செய்யும்.
தாராளமாக செலவு செய்யும் உங்களுக்கு பணவசதி திருப்திகரமாக அமைவதில்லை. ஆனால் இவருடைய செலவினங்களுக்கேற்றவாறு கடன் வசதிகள் தாராளமாக கிடைத்திடும். உங்களுடைய உடன் பிறந்தோர்களால் செலவினங்கள் அதிகமானாலும், உற்ற நண்பர்கள் இவர்களுக்கு வேண்டிய தருணத்தில் தக்க உதவியைப் புரிந்திடுவார்கள். வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் பண வசதிக்காக மிகவும் சிரமப்பட்டாலும், வயது வளர, வளர தங்களது சுய முயற்சியினால் தேவைக் கேற்றவாறு பண வசதியைப் பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். லாட்டரி, ரேஸ் போன்ற ஹேஷ்ய விவகாரங்களில் சில சமயம் சொற்ப வெற்றி ஏற்படும். ஆனால் தொடர்ந்து ஈடுபடுவதால் நஷ்டங்களே ஏற்படும். ஆகவே ஹேஷ்ய விவகாரங்களைத் தவிர்ப்பது நலமாகும்.
தாயாரிடம் அன்பும், பாசமும், பக்தியும் மிகவும்கொண்டவர்கள் ரிஷப லக்ன ஜாதகர்கள். அதுபோலவே தாயாரின் அன்புக்கும் பாசத்திற்கும் மிகவும் பாத்திர மானவர்கள். அன்னையின் செல்லப்பிள்ளைகள் என்று கூறினாலும் தகும். தாயாரின் உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டாலும், நீண்ட ஆயுள் படைத்தவர்களாக இருப்பார்கள். தாய்க்கும் இவர்க்கும் உள்ள பரஸ்பர நேசமும் அன்பும் மற்ற சகோதரரிடையே போட்டியையும் பொறாமையையும் வளர்த்து விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
பெரும்பாலும், இந்த லக்னகாரர்களுக்கு சாதாரணமான கல்விதான் அமையும். பட்டப்படிப்பு ஒரு சிலர்க்கே அமையக்கூடும். ஆனால் எந்தத் துறையில் எந்த அளவு பயின்றாலும் தங்களது ஆராய்ச்சித் திறனால் தமக்கு ஏற்படும் அந்தஸ்துக்கும் கௌரவத்துக்கும் தக்கவாறு தாம் பெற்ற கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் என்றால் மிகையாகாது. ஒரு சில ஜாதகர்களுக்கு இவர்களைவிட அதிகம் படித்த மனைவி வாய்ப்பதும் உண்டு. இந்த லக்ன ஜாதகர்கள் சொந்தமாக வீடு-மனை-வாகனம் அமைத்துக் கொள்ளும் யோகம் பெற்றவர்கள். ஆனால் எதுவாக இருப்பினும் உயர்தரமானதாகவோ அல்லது புதியதாகவோ, அமைத்துக் கொள்ள விரும்புவார்கள். இவற்றிற்காக அதிகச் செலவு ஏற்படினும் தயங்கமாட்டார்கள்.
இவர்களுக்கு புத்திரசந்தானம் அற்பமென்று ஏற்கெனவே கூறியுள்ளோம். இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளால் இவர்களுக்கு வீண் செலவுகளும், கவலைகளும், தொல்லைகளும்தான் ஏற்படுமே தவிர, அவர்களால் இவர்களுக்கு ஆதாயம் ஒன்றும் ஏற்படாது. பெண் குழந்தைகளாக இருந்தால் குடும்பப் பொறுப்புகளை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளுவார்கள். இவர்களால் பெருமையும், உதவிகளும், சில சமயங்களில் பண உதவிகளும் ஏற்படும்.
பரோபகார சிந்தையும் தார்மீக உணர்வும் கொண்ட உங்களுக்கு கடன்களும், கவலைகளும் ஏற்படுவதால் நோய் நொடிகள் அதிகம் ஏற்படுவதில்லை எனலாம். ஆரோக்கியம் நன்றாக அமைந்திருக்கும். நோய் நொடிகள் ஏதாவது ஏற்பட்டாலும் அவை நீடித்து இருக்காது. உடனுக்குடன் நிவாரணம் அடையும். ஆனால் உழைப்பு அதிகமாவதால் நேரம் தவறிய உணவு உட்கொள்ள நேரிடுவதால் ரத்தக் கோளாறும், ஜீரணக்கோளாறும் ஏற்படும். இடுப்பு, கை, கால்களில் வாய்வுப் பிடிப்பினால் வலியுண்டாகும். நீங்கள் உழைப்புக்கேற்றவாறு நேரம் தவறாது உணவை உட்கொள்ளும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். அதிக புளிப்பையும், கிழங்கு வகைகளையும் இவர்கள் சாப்பிடக்கூடாது. பச்சைக் காய்கறிகளையும், நவதானியங்களில் துவரை, கடலை, பயிறு முதலியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும். உங்களது லக்னாதிபதிஆறாமிடத்துக்கும் அதிபதியாவதாலும் நீர்க்கோளான கிரகமாவதாலும், நீரிழிவு போன்ற வியாதிகளும் ஏற்படாமலிருக்க இனிப்பு பண்டங்களைத் தள்ளி ஆகாரவகைகளில் தக்க மாறுதல்கள் செய்துகொள்ள வேண்டும். உங்களது வாழ்க்கையில் மறைமுக எதிரிகளால் பலவித இன்னல் ஏற்பட்டு வாழ்க்கையில் சில சமயம் கவலைகள் தோன்றிவிடும்.
நீங்கள் பெரும்பாலும் சிற்றின்பப்பிரியர்களாக இருப்பீர்கள். சிலர் குறுக்கு வழிகளிலும், நெறி தவறிய பாதைகளிலும் இன்பம் பெறவிரும்புவார்கள்.. திருமணமாகிவிட்டாலும் மாதர்களின் சேர்க்கை ஏற்பட்டு இருக்கும். ஆண் பெண் யாரானாலும், திருமணம் காலம் கடந்துதான் நடைபெறும் இவர்களுக்கு வாய்க்கும் மனைவியால்செலவுகள் அதிகம் ஏற்பட்டு கடன்தான் ஏறிடுமே தவிர சேமிப்பு நிதியில் சேர்க்கும் அமைப்பு ஏற்படுவதில்லை. எனவே இவர்களுடைய திருமண வாழ்க்கையில் ஒற்றுமைக்கு பதிலாக வேற்றுமைகள்தான் அதிகரித்துக் காட்டும். எனினும், உங்களுக்கு அடங்கிய மனைவியாக வாய்ப்பதால் இவர்களுக்குள் ஏற்படும் சில்லரை மனஸ்தாபங்கள் வெளியே தெரியாதவாறு உள்ளுக்குள்ளேயே குமுறிக்கொண்டிருக்கும்.
ரிஷப லக்னத்தில் தோன்றிய ஜாதகர்கள் தீர்க்காயுள் பெற்றவராக இருப்பார்கள். அதாவது சுமார் 74 வயது வரை வாழ்ந்திருப்பார்கள். வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையில் ஏதாவது இடையூறுகள் தோன்றிக்கொண்டே இருக்கும். இந்த ஜாதகர்களின் தகப்பனாருக்கு இவர் பிறந்த பிறகு எல்லாச் சிறப்புகளும், பண சேர்க்கை, புகழ், கௌரவம், அந்தஸ்து, அதிர்ஷ்டம், யோகம் இவை யாவும் மேன்மையாக விளங்கும். எனினும் தகப்பனாரிடம் இவர்களுக்கு சலுகைகள் குறைந்துதான் காணப்படும் பெரியவர்களிடம் அன்பு, மரியாதை, தர்ம காரியங்களில் ஈடுபாடு ஆகிய நற்குணங்கள் அமைந்து இருக்கும். அந்தரங்க பக்தியுடையவர்கள். நீங்கள் சிறந்த பக்திமான்கள் என்பதை வெளி வேஷங்களாலும் டாம்பீகத்தாலும், பகட்டாகவும் பறைசாற்றிக் கொள்வது இவர்களுக்குப் பிடிக்காத ஒன்றாகும்.இந்த லக்ன ஜாதகர்கள் தங்கள் உணவு, உடை முதலியவற்றில் எப்படி சம்பிரதாய வழக்கங்களை கடைப்பிடிக்கிறார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கையிலும் சுகபோக பாவங்கள் குறையாமலிருக்க வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக்கொள்ளும் ஆர்வம் படைத்தவர்கள். தங்கள் சுகம் குறையாமலிருக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். இவர்களுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் கீழ்படிந்து பாடுபடும் சிப்பந்திகள் அமைந்து இவருடைய விருப்பத்திற்கிணங்க அவர்கள் செயலாற்றி இவர்களுக்கு பெயர்-புகழ், கீர்த்தி முதலியவற்றை சம்பாதித்துத் தருவது இவர்கள் ஜாதக விசேஷமாகும். ஆரம்பகால வாழ்க்கை அடிமட்டத்திலிருந்தாலும், தங்களுடைய விடாமுயற்சியாலும், ஊக்கமாகவும் உற்சாகத்தோடும் செயலாற்றுவதாலும் கடின உழைப்பாலும் மேன்மையான சுகவாழ்வை அமைத்துக் கொள்வார்கள். பொதுவாக இவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதிதான் யோகமாக அமையும்.
சிறு வயதிலிருந்தே இவர்கள் ஊதியம் தேட வேண்டிய பொறுப்பு இயற்கையாகவே அமைவதால் படிக்கும் காலத்திலிருந்தே சிறிய சிறிய வேலைகளில் ஈடுபட்டு உழைத்து ஊதியம் பெற்றிடுவார்கள். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் அந்தத் தொழிலில் கடினமாக உழைத்து படிப்படியாக முன்னேற்றம் பெற்றிடுவார்கள். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் அந்தத் தொழிலில் கடினமாக உழைத்து படிப்படியாக முன்னேற்றம் பெற்றிடுவார்கள்.
உங்களுக்கு புத்தகங்கள் எழுதுதல், பத்திரிகை நடத்துதல், எழுத்து வேலை, புத்தி நுட்பமான பணிகள், கலை சம்பந்தமான முயற்சிகள் இயந்திர தொழிற்சாலைகள், விவசாயம், ஜோதிடம், பழயனவற்றைப் புதுப்பிக்கும் தொழிற்கூடங்கள், மின்சாரம் ரயில்வே, நிலபுன்களை பராமரிக்கும் துறை, கறுப்பு நிற வஸ்துகள், சுழலும் யந்திரக் கருவிகளைப் பழுதுபார்த்தல் போன்ற துறைகளில் தொழில் அமைத்துக் கொள்வீர்கள். பிறருக்காக பிரதிநிதியாக பணியாற்றும் தொழில்களிலும் சாமர்த்தியமாக ஆற்றல் பெற்றவர்கள். அச்சுத் தொழிலிலும், பத்திரிகைத் தொழிலிரும் சிறந்து விளங்குவார்கள். அடிமைத் தொழில் உங்களுக்கு பிடிக்காததாயினும் அதையே ஏணியாகக்கொண்டு வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் காண்பவர். தொழில் துறையில் உங்களுக்கு எதிரிகளால் அடிக்கடி நச்சரிப்புகளும் தொல்லைகளும் தோன்றி மறையும்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் கூட்டாளிகளுடனும் கூட்டுறவுத் தொழில்களிலும் பிறரை நம்பி தன்வேலைகளை ஒப்படைப்பது போன்ற காரியங்களிலும், பணம் கொடுக்கல் வாங்கல்களிலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவர்கள் வேலையை ஒப்படைக்கும் சில நபர்கள் இவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதால் பின்னர் இவர்கள் வருத்தப்படும் சூழ்நிலை உருவாகலாம். எனவே இவர்கள் மிக எச்சரிக்கையாக இருப்பது நலம்.
இவர்கள் தாராள மனதுடையவர்கள் ஆனதாலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் ஆனதாலும் இவர்களுக்கு செலவினங்கள் அதிகம் என்றே சொல்லவேண்டும். சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாலும், வீடு-நிலம்-மனை போன்ற ஸ்திர சொத்துக்களை வாங்குவது அல்லது பழுது பார்ப்பது போன்றதாலும், வாகனங்களுக்காகவும், கூட்டாளிகளுக்காகவும், மனைவிக்காகவும் செலவுகள் அதிகம் ஏற்படும். அடிக்கடி வெளியூர் பிரயாணங்களை ஏற்பதாலும் பிரயாண செலவினங்கள் அதிகாரித்துக்காட்டும். தங்கள் வாழ்க்கை நிலைக்கேற்ப செலவினங்கள் புரிய கடன் பெற வேண்டி வருவதாலும், கடன்களுக்காகவும் வட்டி முதலியவற்றிற்காகவும் அதிக செலவினங்கள் ஏற்படும்.
இனி இந்த லக்னத்தில் பிறந்த பெண்களைப் பார்க்கலாம்.
நீங்கள் கவர்ச்சிகரமாக விளங்குவார்கள். எழில் நிறைந்த மேனியும், கனிந்த இனிய பார்வையும், உருண்டையான முகமும் சுருட்டையான கறுத்த தலைமுடியும் பெற்றிருப்பார்கள். அகன்ற நெற்றியும், பரந்த வாயும், எடுப்பான மார்பும் அமையப்பெற்றவர்காளக இருப்பீர்கள். நிதானமாகப் பேசும் நீஙகள் எல்லாருடனும் நட்பு பாராட்டுவீர்கள். முத்துப்போன்ற பல்வரிசையும், மிருதுவான கைகளும் உடைய உங்களது விரல்கள் நீண்டு கூர்மையாக இருக்கும். வெகுளியாக இருப்பதால் உங்களை வசப்படுத்துதல் மிகவும் சுலபம். அடக்கமானவர் பொறுமைசாலியானாலும், எதிலும் பயப்படாத தீரம் மிக்கவர்கள். உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது தீடீர் முடிவுக்கு வருவார்களானால், அதினின்று உங்களை பின்வாங்கச் செய்வது கடினமாகும். தீவிர வைராக்யமுள்ளவர்களானாலும் பிறரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களல்லர்.
ஆரோக்கிய வாழ்வு பெற்றவர்கள், பரந்த மனப்போக்கும், சுதந்திர மனப்போக்கும் கொண்ட இவர்கள் விட்டுக் கொடுக்கும் தன்மையுடையவர்கள். பொறுமை, உழைப்பு, பெருந்தன்மை படைத்த இவர்கள் எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் சாமர்த்தியமாக செய்து முடிப்பார்கள்.
திருமணமான நாள்முதல் உங்களுடைய எண்ணங்களும் அபிலாஷைகளும் ஈடேறாமல் உங்களுக்கு கவலையை அதிகரிக்கச் செய்யும். சகிப்புத்தன்மையும், பொறுமையும் அதிகம் கொண்டவர்களாதலால் தங்களது கவலைகளை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொள்ளும் சாமர்த்தியம் படைத்தவர்கள். உங்களுக்கு நற்பவழம் மிகவும் உயர்ந்த ரத்தினமாகும். மாலையாகவோ அல்லது மோதிரம் போன்றவற்றில் பதித்து போட்டுக் கொண்டால் சிரமங்கள் குறைந்து நன்மைகள் அபிவிருத்தி அடையும்.
No comments:
Post a Comment