ASTROLOGE

ASTROLOGE

01 February 2014

ஜோதிடம் பற்றிய ஒரு கண்ணோட்டம்



    ஜோதிடம் பற்றி ஒரு கண்ணோட்டம்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.
நம் முன்னோர்களாகிய முனிவர்கள் தங்களது தவ்வலிமையாலும். அறிவாற்றலாலும் வானின் கண் தோன்றியுள்ள சூரியன் முதலான கோள்களையும் அசுவதி முதலான நட்ச்சத்திரங்களையும் மேஷம் முதலான இராசிகளையும் மற்றும் பல கிரகங்களையும் ஆராய்ந்து சூரியனின் ஒளியே கொண்டு உத்தராயணம், தக்ஷ்ணாயனம் என்ற பாகுபாட்டையும்.வசந்தம் முதலான ருதுகளையும்,சித்திரை முதலான மாதங்களையும், வளர்பிறை தேய்பிறை என்ற இரு காலத்தையும்

நாள்,திதி,யோகம்,கரணம், போன்ற பஞ்சாங்கத்தையும்,அதன் காலஅளவையும் நிர்ணயித்து மேலும் வானஆராய்ச்சிக்கு உரிய நூட்பமான பல விஷயங்களையும் தங்களது கணிதஅறிவால் ஆராட்சி செய்து வானசாத்திரத்தை உருவாக்கினார்கள்.இந்த சாஸ்திரம் மூலம் மனிதவாழ்வின் வருங்கால இன்பதுன்பங்களை முன்கூட்டி அறிந்துக்கொள்ள பயன்படும் கலையே ஜோதிடக் கலையாகும்.
தாய் வயிற்றில் குழந்தை கருவாக உருவாகி வளர்ந்து இம்மண்ணுலகில் குழந்தை பிறக்கும் அதே தருணத்தில் வானில் உலவும் இதர ஒன்பது கோள்களின் நிலையே அடிப்படையாக்க் கொண்டு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழப்போகும் யாவற்றையும் அறிந்துக்கொள்ளு உதவும் ஒர் கணிதகலையே ஜோதிடசாஸ்திரம்.
இப்பிறப்பில் மனிதன் ஒருவனுக்கு இறைவனால் தொகுத்தளிக்கப்பட்டுள்ள பிராராப்த்த பகுதியே அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்ற ஒர் அற்புதமான கணிதகலையே இது. ஆனால் இக்கலையின் பலித்த்திற்கு முக்கியமான நிபந்தனைகள் மூன்றுண்டு அவை.
1. குழந்தை பிறந்த தேதி,நேரம்,பிறந்தஇடம், இம்மூன்றும் இம்மியும் பிறழாதப்படி சரியாக நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.
2. ஜாதகத்தை பிழையின்றி கணித்து வரையும் திறமைஜோதிடர்க்கு இருக்கவேண்டும்.
3. ஜாதகப்பலனை கூறும் ஜோதிடர் கேட்கவந்தவரின் மனநிலையே புரிந்து அதற்கு தக்கவாறு முகஸ்துதி செய்து பணத்துக்கோ,புகழுக்கோ ஆசைபடும் துர்க்குணம் இல்லாதவராயும். இராசி மற்றும் கிரகத்தின் குண,பாவ,பலத்தை நன்குஉணர்ந்து குரு மொழியில் நம்பிக்கை கொண்டு அதன்மூலம் கிடைக்கும் உன்மையான அனுமானபலத்தை எடுத்துரைக்கும் வாக்கு வன்மையான ஜோதிடராக யிருக்கவேண்டும்.
இம் மூன்றில் ஒரு தகுதி இல்லாமல் போனாலுங்கூட ஜாதகபலன் தவறாகிவிடும்.
ஜோதிடம் என்பது ஒவ்வெறு தனி மனிதனின் வாழ்கையில் ஏற்படும் நிகழ்வுகளை இடம்,பொருள்,காலம்,நிமித்தம், போன்ற காரண காரியத்தின் மூலம் தெளிவாக அறியமுடியும்.
மனிதர்கள் எப்போதும் மனத்தால் தனக்கு தானே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் அது என்னவென்றால்.நான் இதை இப்போது செய்யலாமா?,என் எண்ணம் நிறைவேறுமா?, என் எண்ணம் சரியா அல்லது தவறா?, நான் இதை எப்போது செய்யலாம்?, என் தேடுதல் ஆசை எப்பேது நடக்கும்?, நான் இந்த கஷ்டத்தில் இருந்து எப்போது விடுதலை அடைவேன்?. இது போன்ற கேள்விகள் மனித மனதில் எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக்கும். இந்த கேள்விக்கு தகுந்தபதிலை அறிவு பக்குவப்பட்ட மனிதர்கள் தனக்கு தானே தேடி வெற்றிக்கொள் கின்றனர் இவர்களுக்கு ஜோதிடமும்,ஜோதிட ஆலோசனையும் தோவையில்லாத ஒன்றுதான்.
ஆனால் பலவாறகாக சிந்தித்தும் அறிவு தெழிவுபெறாமல் கலக்கம் பெற்ற மனிதனுக்கு ஒரு அறிவுறை தேவைப்படுகிறது இவர்கழுக்குதான் ஜோதிட சாஸ்திரம் துனைபுரிகின்றது. இப்படி கலக்கம் பெற்று வரும் மனிதனுக்கு அவன் பிறவி ஜாதகத்தை தெழிவான முறையில் ஆராய்ச்சி பண்ணி அதன்மூலம் கிடைக்கும் கிரககுண பலன் களையும் அவன் பருவகால திசா பலனையும் உணர்ந்து அவன் அறிவுதெளியும் வரை போதிக்கவேண்டும் இதுவே ஒரு குரு மொழி உணர்ந்த ஜோதிடரின் கடமையாகும்..
இதுவல்லாமல் இன்றைய வியாபார விளம்பரத்திற்குவேண்டி ஜோதிடத்திற்கு சம்ந்தம் இல்லாத எண்கணிதம்,கையழுத்து ஜோதிடம்,பெயர்மாற்றுதல்,ஆவிகளோடு பேசுதல்,போன்ற ஏமாற்று கலையே பயன்படுத்தி அறிவு தெழிவுயில்லாமல் வரும் மனிதனை ஏமாற்றுவது அபயம் என்று வருபவனை கழுத்தை அருப்பதற்கு சமம். மனிதனின் மனத்தில் ஒரு வகையான திகில் பயத்தை உருவாக்கி கலங்கவைத்து அதை நிவர்த்தி பண்ண பரிகாரம் என்ற பணம்பறிக்கும் வித்தை செய்யும் ஜோதிடர்கள் ஜோதிட சாஸ்திரத்திற்கு புறம்பானவர்கள். அவர்களை மக்கள் இனம்கண்டுக்கொள்ளவே நான் இதை இங்கு சொல்லுகின்றேன்.
சித்தர்களின் நல்லஎண்ணத்தால் உறுவான ஜோதிடம் பிறவிவினையே அகற்றி ஆத்மா சொருபம் கண்டு ஆனந்தம்மடைய வைப்பதல்லாமல் மனிதர்களை ஏமாற்றி தீயவளியில் தள்ளுவதல்ல என்பதை மனிதர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். மனிதனுக்கு ஒரு கஷ்டதுக்கம் வரும்போது அதை தாங்கும் மனநிலையே பெருவதற்கு ஏற்ற நல்ல ஒழுக்கமான வழிமுறையே இந்த ஜோதிடசாஸ்திரம் சொல்லுமே தவிற, பரிகாரத்தால் கஷ்டத்தை மாற்றி மனிதனை எப்போதும் சந்தோஷமாக வைக்கமுடியும் என்று ஒரு போதும் சொல்லாது. உணர்த்த உணரும் உயிர் என்ற தத்துவத்தின்படி மனிதனின் உள்கிடக்கும் உயிரின் குணத்தையும்,சொயல்பாட்டையும் அவன் நல்வினைக்கு தகுந்த பருவக்காலத்தை சுட்டிகாட்டி செயல்படவைப்பதுதான் ஒரு ஜோதிடரின் கடமை.
ஜோதிடத்தை நம்புங்கள் ஆனால் அதற்கு அடிமையாகி விடாதீர்கள்.
நன்றி.
ஜோதிடர் எஸ்.அரிச்சந்திரன்

No comments:

என்னில் உள்ளது