ASTROLOGE

ASTROLOGE

01 February 2014

குழந்தைக்கு பெயர் அமைப்பது யார்.....


பெயர்,அழகு,இன்பம்,பிணி,மூப்பு,சாக்காடு, இந்த ஆறும் கருவில் அமைத்தப்படியே.....என்பதுதான் சாஸ்திரம். கருஉருவாக காரணமாக இருப்பவர்கள் பெற்றோர்கள் அவர் உணர்வில் இருந்துதான் அனைத்தும் உற்பத்தி ஆகின்றது அவர்கள் உணர்வில் வரும் வார்த்தைகளே குழந்தைக்கு பெயராக மலரவேண்டும்.....அப்போதுதான் அது இயல்புஉண்ரவோடு வாழக் கற்றுக்கொள்ளும். நான் சிருவயதாக இருக்கும் போது சில முதியவர்கள் தவறு செய்தவர்களை திட்டுவார்கள் எப்படி என்றால் உனக்கு பெயர்வைத்தவன் எவன் என்று ஏழனமாக திட்டுவார்கள் அதன் பொருள் என்னவென்றால் நீ பிறக்க காரணம் மான அப்பா வேறு யாரோ எனற காரணம் ஆகும்.......இப்படி பெயர் தேர்ந்து எடுப்பதில் அப்பாவுக்கு உள்ள உரிமையே இப்போது ஜோதிடகள் 
வாங்கி உள்ளனர்......எடுத்து காட்டாக ஆயில்யம் நட்ச்சத்திரத்திற்கு எழுத்து -பு,டு,டே,டோ....என்பதாகும் இதில் நீங்கள் என்ன பெயரை வைக்க சொல்லமுடியும் ....டு....என்பது கொண்டு என்னபெயர்வைப்பது என்று திருதிருவென்று முழிக்கும் மக்களுக்கு அதில் தான் வைக்கவேண்டும் இல்லாவிட்டால் உங்கள் குழந்தைக்கு ஆயுள் குறைவு என்று பேமாரி தனத்தை காட்டும் ஜோதிடர்களுக்கு என்ன சொல்வது....இவ்வளவு தெழிவாக தமிழ் மொழிய உருவாக்கிய சித்தகாலபுருஷ்ன்மார்கள் பெயர் வைப்பது டு..டி..டே என்ற எழுத்தில் வைக்கவேண்டும் என்று ஒரு போதும் சாஸ்திரத்தில் சொன்னது இல்லை இனியாவது ஒரு புனித கர்மம் என்ற ஜோதிட தொழிலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் ....பெயர் ராசி,எண்கணிதம் பெயர்வைத்து பொருத்தம் பார்பது போன்ற பித்தலாட்ட செயலை விட்டு விட்டு ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கின்றதோ அதை கற்று சொல்வது நல்லது ,,,,,,நன்றி

No comments:

என்னில் உள்ளது