ASTROLOGE

ASTROLOGE

08 February 2014

லக்னம் பற்றிய ஆய்வின் முடிவு

          லக்னம் பற்றிய இறுதியான முடிவு.
லக்னம் என்பது பிரசன்னலக்னம், ஆரூடலக்னம், உதையலக்னம்,ஜென்மலக்னம்,கடிகைலக்னம் பார்சூணாலக்னம் இந்துலக்னம் ஒராலக்னம்,தாராலக்னம் அம்சலக்னம் என்று பலகணிதம் உள்ளது இதில் இருந்து லக்னம் என்பது ஒரு செயலின் தொடக்கம் அல்லது ஆதாரபுள்ளி என்று மட்டும் உணரலாம் ..நாம் ஆராய்வது ஜென்ம லக்னம் ....ஒரு சிசு தாயின் வயிற்றில் கருவாக உறுவாகி 10 மாதம் தன் தாயின் பிராணனை உட்கொண்டு வளர்கின்றது அது கனிந்து சுயம் என்கின்ற முடிவான நிலையே அடையும் போது பிறவி என்கின்ற சூழல் உருவாகு கின்றது அது தன் தாய்வயிற்றில் இருந்து வெளி வந்ததும் தயின் தொடர்பு விட்டு போவதில்லை..எப்போது அந்த தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டு முடிச்சி போடப்படுகின்றதோ அப்போது தாயில் இருந்து கிடைத்த மூச்சின் ஒருபகுதி சிசுவின் உள் கும்பகமாக செயல்பட்டு அது தன் சுவாச உருப்பு திரந்து பிரபஞ்ச பிராணனுடன் தொடர்பு கொள்கின்றது அப்போது நம் உள் ஒரு சிரு வெற்றிடம் உண்டாகின்றது அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு வெளியில் உள்ள பிராணன் உள் சொன்று அந்த இடத்தை பூரணம் மாக்கு கின்றது இதுதான் லக்னம். முதல் பிராண அசைவு அல்லது உண்ரவு இது தான் லக்னம்..அந்த உணர்வில் ஒலி தோன்றி அதில் ஒளி தோன்றி நாதம் மாக சப்தசுரம் மாக காலம் தோன்று கின்றது உடனே சுரத்தின் மூலம் பூதம் வந்து அதிலே வாழ்கை ஆரம்பிக்கும் புள்ளி என்ற நான் உருவாகுகின்றது..இது எப்படி ராசி கட்டத்தில் குறிப்பிடுவது..அதன் நேரம் எப்படி கணிப்புக்கு உள் படுத்துவது ஒரு ஜாதகம் எழுதியபின் குறிப்பிட்ட.இந்த நபர் ஜாதகம் தான் என்பதை எந்த காரணிகளை கொண்டு உறுதிப்படுத்துவது.....மேலும் விரிவாகப்பார்போம் அதற்கு முன் ராசி என்பது என்ன என்பதை பற்றி அடுத்த பதிவில் பார்போம்.....லக்னம் பற்றி ஆன்மீகரீதியில் தத்துவரீதியிலும் சொல்லவேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம் நம் ஆராய்ச்சி ஜோதிடத்தில் லக்னம் என்பதை பற்றியதாக இருப்பதால் இந்துடன் முடித்துக்கொல்கிறேன் நன்றி வணக்கம்



No comments:

என்னில் உள்ளது